உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் ருத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

நெல்லிக்குப்பம் ருத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் ருத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. நெல்லிக் குப்பம் வண்ணாரப்பேட்டை ருத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது. பிறகு அம்மனுக்கு 108 சங்கா பிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ஆனந்தராஜ் பூசாரி செய்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !