கூடுவாஞ்சேரி வலம்புரி விநாயகருக்கு 25ல் கும்பாபிஷேகம்
ADDED :2251 days ago
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கிராமம், சிலம்பொலி நகரில், ராஜயோக வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் அதன் துணைக் கோவில்களாக ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னிதிகள், சமீபத்தில், பொதுமக்களால் கட்டப்பட்டன.
இதையடுத்து, இக்கோவிலில், நுாதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம், 25ம் தேதி நடைபெறுகிறது. விழாவை ஒட்டி, இன்று 23ம் தேதி காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை சிறப்பு தீப ஆராதனைகள் நடக்கின்றன.வரும், 25ல், காலை, 8:00 மணிக்கு, ராஜயோக வலம்புரி விநாயகர், ஆஞ்ச நேயர் மற்றும் நவக்கிரக கலசங்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, காயரம்பேடு கிராமத்தினர் செய்கின்றனர்.