உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா

சென்னை நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா

சென்னை: சென்னை நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கிருஷ்ணர் கோவில்களில் உறியடி உற்சவத்துடன் களை கட்டியது.ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத் திரம் சேர்ந்த நாள் கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாள். நாடு முழுவதும், இந்நாள் ஹிந்துக்களின் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.சிலர் நட்சத்திரம், திதி பார்த்து கொண்டாடுவதால், இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா, பெரும்பாலானோர் நேற்று 23ம் தேதி கொண்டாடினர்; இன்று 24ல் வைணவர்கள் கொண்டாடு கின்றனர்.கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, சென்னை நகரில் உள்ள, கிருஷ்ணர் கோவில்களில், நேற்று 23ம் தேதி,  சிறப்பாக இவ்விழா நடந்தது.சென்னை, சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில், இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அங்கு கிருஷ்ண யாகம், அபிஷேகம், தரிசனம் நடந்தது.கோபாலபுரத்தில் பழமை வாய்ந்த வேணுகோபாலசாமி கோவில், கவுடியா மடம், மயிலாப்பூர், நந்தலாலா, கோட்டூர்புரம், சாஸ் திரி நகர் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, கோ பூஜை, விஷ்ணு சகஸ் ரநாம பாராயணம் ஆகியவை நடந்தன.இன்று 24ம் தேதி, அமிர்தம் கடைதல், குசேலர் வைப வம், உறியடி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !