மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் இலவச குடை வழங்கும் விழா
மதுரை : மதுரை தாம்பிராஸ் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கூடலழகர் பெரு மாள் கோயில் முன்பு ஏழைகளுக்கு இலவச குடைகள் வழங்கும் விழா நடந்தது.மாநில துணை பொதுச்செயலாளர் இல.அமுதன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பட்டாபிராமன், ஜெய்ஹிந்த் புரம் கிளை பொதுச் செயலாளர் ராம கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் பயனாளிகளுக்கு குடை களை வழங்கி பேசுகையில், ”இல. அமுதன் 6 ஆண்டு களாக ஏராளமானோருக்கு இலவச குடைகளை வழங்கி வருகிறார். ஆதரவற்றோருக்கு மயான காரியங்களை செய்து கொடுக் கிறார். அவரது சேவை பாராட்டுக்குரியது” என்றார்.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கூடலழகர் கோயிலில் கிருஷ்ண, ராதை வேடம் அணிந்து வந்த குழந்தைகள், மற்றும் மதுரை திருப்பாலை கிருஷ்ண பலராம் கோயிலில் அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.