உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை

வீரராகவப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை

திருப்பூர் : திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், ஸ்ரீ ஜெயந்தியையொட்டி, இன்று மாலை, ஊஞ்சல் சேவை உற்சவம் நடக்கிறது.திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், 2014ல் நடந்தது. அதன்பின், ஸ்ரீ ஜெயந்தி ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு என, பல்வேறு வழிபாடுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதன்படி, இன்று, ஸ்ரீ ஜெயந்தி விழா நடக்கிறது.கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள், ஸ்ரீ ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஊஞ்சலில், கிருஷ்ணர் விக்ரஹகத்தை அலங்கரித்து வைத்து, சங்கு மூலமாக பால் வார்க்கும் வைபவம் இன்று மாலை,6:30 மணிக்கு நடக்கிறது. சிறுவர், சிறுமியர் மற்றும் பக்தர்களுக்கு, சங்கு பால் பிரசாதமாக வழங்கப்பட இருப்பதால், பக்தர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என, கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !