தேனி மாவட்ட கோயிகளில் கிருஷ்ணஜெயந்தி விழா
தேனி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பள்ளிகளில் மாணவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தேனி என்.ஆர்.டி.,நகர் கணேச கந்தபெருமாள் கோயில், பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில், அல்லிநகரம் வரதராஜபெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.* போடி: போடி திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சலவைக் கல்லிலான கிருஷ்ணர் அலங் காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருஷ்ணர், ராதை வேட போட்டிகள் நடத்தப் பட்டன. அதில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சீனிவாசப்பெருமாள் கோயிலில் சுவாமி ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியர் செய்திருந்தார். குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து சுவாமியை தரிசித்தனர்.* ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வைகை ரோடு நந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் சுவாமிக்கு புனித நீராட்டுக்குப்பின் திருமஞ்சனம் சாற்றி பாசுரப்பாடல்களுடன் அபிஷேகம் நடந்தது.யாகசாலை பூஜை, தீபாராதனைகள் நடந்தது. உற்சவர் நந்தகோபால் சுவாமி பாமா, ருக்மணி டன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்னதானம் நடந்தது. கிருஷ் ணர், பாமா , ருக்மணி வேடமணிந்த குழந்தைகள் கோயிலில் வலம் வந்து வணங்கினர். மாலையில் நந்தகோபாலகிருஷ்ணர் வாண வேடிக்கை, மங்கள மேளம் முழங்க திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.* பெரியகுளம்: பெரியகுளம் கோபாலகிருஷ்ணன் கோயிலில் விழா சுப்ரபாதத்துடன் துவங் கியது. தொடர்ந்து கோபூஜையும், மூலவர் கிருஷ்ணருக்கு பால், தயிர், வெண்ணெய் உள்ளி ட்ட அபிஷேகம் நடந்தது. ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணருக்கு அவல், வெண்ணெய், பழங்கள் நெய்வேத்தியம், உற்சவர் நவநீதிகிருஷ்ணனு க்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறுவர்கள், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமணி ந்து வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார்.பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ராதை, கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை முதல் இரவு வரை ஹரே ராம நாமகீர்த்தனம் சிறப்பு பூஜை நடந்தது. சிறுவர்கள், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் ஒருங்கிணைப்பளார் கிருஷ்ணசைதன்யதாஸ் , பக்தர்கள் செய்திருந்தனர்.பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில், லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.