பேரையூர் விநாயகர் ஊர்வலம் ஆலோசனை கூட்டம்
ADDED :2267 days ago
பேரையூர் : விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து பேரையூர் போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி., மதியழகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பேரையூர், சாப்டூர், அத்திப்பட்டி, குமராபுரம், தும்மநாயக்கன்பட்டி உட்பட பல்வேறு கிராமங் களை சேர்ந்த விநாயகர் சிலை அமைப்பு குழுவினர் பங்கேற்றனர். போலீசார் கூறியதாவது: களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். சிலை வைக்கப்படும் இடத்தில் 12 நபர்கள் இருக்க வேண்டும். போலீசார் அனுமதிக்கப்பட்ட இடத்தில் சிலையை வைக்க வேண்டும். சிலை எடுத்து செல்லும் ஊர்வலத்தில் வானவெடிகள், பட்டாசுகள் வெடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது என்றனர்.