உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரங்கிப்பேட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கோ பூஜை

பரங்கிப்பேட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கோ பூஜை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த கோ  பூஜையை, சிதம்பரம் ரங்காச்சாரியார் சுவாமிகள் துவக்கி  வைத்தார்.

பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், ராம  அனுமன் தர்ம பரிபாலன அறக்கட்டளை மற்றும் அகத்தியர் பவுண்டேஷன்  இணைந்து கோ பூஜை விழா நடத்தின.

அதையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து. கோ பூஜையில், பங் கேற்ற 200க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோ பூஜையை, சிதம்பரம் ரங்காச்சாரியார் சுவாமிகள் துவக்கி வைத்தார். விழாவில், கோலாச்சாரியார் சுவாமி கள், அகத்தியர் பவுண்டேஷன் தலைவர் ஈஸ்வர் ராஜலிங்கம், விவசாய சங்க தலைவர் விஜய குமார், உத்திராபதி, செந்தமிழ்ச்செல்வி ராமதாஸ், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, பரங்கிப்பேட்டை மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை, ராம அனுமன் தர்ம பரிபாலன அறக்கட்டளை நிறுவனர் சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !