நாமக்கல் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :2276 days ago
நாமக்கல்: ஆவணி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நாமக்கல் - மோகனூர் சாலை, பாலதண்டாயுதபாணி கோவிலில், கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
மூலவருக்கு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட் களால் அபிஷேகம்; தொடர்ந்து, வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு, மலர் மாலைகள் அணிவி க்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் பாலதண்டாயுதபாணி அருள் பாலித்தார். தீபாராதனை காட்ட ப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதே போல், உற்சவர் பாலதண்டா யுதபாணி, வள்ளி, தெய்வானையுடன் கல்யாண சுப்ரமணியர் அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக, சிறப்பு யாக வேள்வி நடந்தது.