உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை விழா

திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை விழா

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆவணி கிருத்திகை நாளில்,  பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேற்ற குவிந்தனர்.திருப்போரூர் கந்தசுவாமி  கோவிலில், விசேஷ சுப முகூர் த்த மாதமான ஆவணி மாதத்தின் கிருத்திகை  விழா, நேற்று 23ல் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்,  சரவணப்பொய்கை குளத்தில் நீராடி, சுவாமியை வழிபட்டனர்.

பிரார்த்தனையாக  துலாபாரம், காவடி எடுத்தல், மொட்டை அடித்தல், அலகு குத்தல், காதுகுத் தல்  நிறைவேற்றினர்.மேலும், அம்மன் கோவிலில் நடைபெறும் வழிபாடு போல்,  கோவில் கிழக்கு பக்க ஈசானிய மூலையில், பெண்கள் பொங்கலிட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !