உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி கேடகத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர் உலா

வெள்ளி கேடகத்தில் பிள்ளையார்பட்டி விநாயகர் உலா

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வெள்ளி கேடகத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர் வீதி உலா நடந்தது. சதுர்த்தி பெருவிழா ஆக.,24 கொடியேற்றத்துடன் துவங்கியது. அறங்காவலர்கள் அமராவதி புதுார் ராம.அண்ணாமலை, தேவகோட்டை மீ.நாகப்பன் முன்னிலை வகித்தனர். நேற்று இரவு மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். எட்டாம் திருநாள் வரை தினமும் காலை வெள்ளி கேடகத்தில் சுவாமி புறப்பாடு, இரவு சிம்ம வாகன புறப்பாடு நடக்கும். சதுர்த்தி விழாவை முன்னிட்டு தினமும் இசை, நாட்டியம், பாடல், கவியரங்கம், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !