நித்யகல்யாண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :2269 days ago
காரைக்கால் : காரைக்கால், பாரதியார் சாலை நித்யகல்யாண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. அதனையொட்டி மூலவர் ரெங்கநாதர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.கிருஷ்ணர் அவதார நிகழ்ச்சியை தொடர்ந்து, உறியடி உற்சவம் நடந்தது. நித்ய கல்யாண பெருமாள் கிருஷ்ணர் அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. வீதி உலாவின் போது இளைஞர்கள் உறியடித்தனர்.