ஷீரடி சாய்பாபா கோவிலில் வரும் 11ல் கும்பாபிஷேகம்
வாழப்பாடி: வரும், 11ல், ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. வாழப்பாடியில், இரு ஆண்டுக்கு முன், சாய்பாபா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன் மூலம், மன்னாயக்கன்பட்டி அமர்ணா ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், 2 ஏக்கரில், ஷீரடி சாய்பாபாவுக்கு கோவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு, ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வந்த, 4 அடி உயர பளிங்கு கல் ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. மேலும், சாந்த ஆஞ்சநேயர், ராஜகணபதி, மும்மூர்த்தி தத்தாத்திரேயர் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து, செப்., 11ல் கும்பாபி ஷேகம் நடத்த, ஏற்பாடுகளை, அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, அறக்கட்டளை நிர்வாகி மாதேஸ்வரி ஜவஹர் கூறியதாவது: இரு ஆண்டாக, வாழப்பாடியில், வாரந்தோறும் சாய்பாபாவுக்கு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். மன்னாயக்கன்பட்டி மலைக்குன்று பகுதியில், ஷீரடி சாய்பாபாவுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, வரும், 11ல் கும்பாபிஷேகம் நடத்த, ஏற்பாடு நடந்து வருகிறது. விழாவுக்கு பொருளுதவி செய்ய விருப்பமுள்ளவர்கள், 83444 25252 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.