உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலையில் செப்.,7ல் பிட்டுக்கு மண் சுமக்கும் விழா

சென்னிமலையில் செப்.,7ல் பிட்டுக்கு மண் சுமக்கும் விழா

சென்னிமலை: வந்தி என்ற மூதாட்டி, மதுரையில் பிட்டு அமுது சமைத்து விற்று பிழைத்து வந்தார். வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் ஆளுக்கு ஒருவராக சென்று, கரையை அடைக்கும்படி, பாண்டிய மன்னன் உத்தரவிட்டான். வயோதிகத்தால் வந்தி மூதாட்டி, வேலைக்கு செல்ல முடியாமலும், கூலிக்கும் ஆள் கிடைக்காமல் தவித்தார். தான் வணங்கும் சிவபெருமானிடம் முறையிட்டார். அப்போது சுந்தரேச பெருமான், கூலியாளாக வந்தார். பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வதாக கூறி, வைகை கரையையும் அடைத்தார். இறுதியில் வந்தி, பாண்டிய மன்னனுக்கும் காட்சியளித்தார். இதை கொண்டாடும் விதமாக, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், 39ம் ஆண்டு விழாவாக, வரும் செப்.,7ல் பிட்டுக்கு மண் சுமக்கும் விழா நடக்கிறது. பார்க் ரோட்டில் வைகை கரை அமைத்து, கைலாசநாதர், அலமேலுமங்கை, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளுகிறார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !