உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் விநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

குன்னூர் விநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

குன்னூர்: குன்னூர் நகர, ஒன்றிய விஸ்வ இந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. குன்னூர் விநாயகர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா, குழந்தைகள் தின விழா, தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கிருஷ்ணாபுரம் கிருஷ்ணர் கோவிலில் கோ பூஜை, ஊர்வலம் ஆகியவை நடந்தன. இதில் கிருஷ்ணர், ராதா வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை குன்னூர் நகர, ஒன்றிய விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !