உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் பூத்த நாகலிங்கப்பூ

பிள்ளையார்பட்டியில் பூத்த நாகலிங்கப்பூ

திருப்புத்துார் : பிள்ளையார்பட்டி கோயில் அருகில் பூத்துள்ள  நாகலிங்கப்பூக்களை பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

நாகலிங்கப்பூக்கள் சிவ அம்சமாக பக்தர்களால் வணங்கப்படுகின்றன. பூவின்  தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும். நடுவில்  சிவலிங்கமும், அதைச்சுற்றி முனிவர்கள் இருப்பதைப்போல தெய்வாம்சம்  நிறைந்த அழகிய வடிவில் காணப்படும். தற்போது இந்த அதிசயமான பூக்கள்  தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவால யங்களிலும், மேற்குத் தொடர்ச்சி  மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது. திருப்புத்துார் அருகே  பிள்ளையார்பட்டியில் கோயில் அருகில் இம்மரம் உள்ளது. அதில்

தற்போது  பூக்கள் பூத்துள்ளன. மரத்தின் வேர்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும்  பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி  அதில் பூத்து ள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நாகலிங்கப்பூ குறித்து  தெரிந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !