கடலுார் திருமஞ்சன உற்சவம்
ADDED :2424 days ago
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் கண்ணபிரான் கோவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் 25ம் தேதி திருமஞ்சனம் நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர், திருவரசன் பிள்ளை தோட்டம், ருக்மணி, சத்யபாமா சமேத கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 24ம் தேதி துவங்கியது.
இதில் விஷேச பூஜைகள், திருமஞ்சனம், இரவு உறியடி உற்சவம், சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று 27 ம் தேதிகாலை திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு கருட சேவை, கண்ணபிரான் வீதியுலா நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுந்தர்பட்டர் ,ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.