உடுமலை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்
                              ADDED :2257 days ago 
                            
                          
                           உடுமலை:உடுமலை, பெரியகடை வீதி நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில்,  கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழாவில் வெண்ணை தாழி கண்ணன் அலங்காரம்  நடந்தது.
நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஆவணி மாதம், கிருஷ்ணரின்  அவதாரங்களை, ஒவ் வொரு நாளும் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து, ஜெயந்தி  விழாவை கொண்டாடுகின்றனர். ஜெயந்தி உற்சவம் நேற்றுமுன்தினம் 25ம் தேதி துவங்கியது. முதல்நாளில் பூமிநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளுக்கு சந்தான கோபால கிருஷ்ணன் சேவை நடந்தது.
விழாவில், மூன்றாம் நாளான நேற்று 26ம் தேதி மாலை, 4:00 மணிக்கு ’வெண்ணை தாழி கண்ணன்’ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.