எழுமலையில் வழுக்கு மரம் ஏறும் விழா
ADDED :2257 days ago
எழுமலை : எழுமலை திருவேங்கடப்பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் திருவிழா 13 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.
இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தரு ளினார். ஆறு இடங்களில் 50 அடி உயரமான வழுக்கு மரங்கள் நடப்பட்டிருந்தன. பெருமாள் ஊர்வலம் ஒவ்வொரு வழுக்கு மரம் அருகில் வந்தவுடன் இளைஞர்கள் திரண்டு வேட்டி, சாக்கு போன்றவற்றின் உதவியுடன் வழுக்கும் மரத்தில் ஏறினர். ஒவ்வொரு மரமாக ஏறி பரிசுப் பொருட்கள் எடுக்கப்பட்டபின் பெருமாள் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றார். 13 ஆண்டுக ளுக்கு பின் விழா நடந்ததால் சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர்.