உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு பகுதிகளில் 45 இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

கிணத்துக்கடவு பகுதிகளில் 45 இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழாவில், 45  விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.கிணத்துக்கடவில், விநாயகர்  சதுர்த்தி விழாவுக்கு இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்படுகிறது.

இதற்காக, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து, இந்து அமைப்புகளுடன்  போலீசார் பேச்சு நடத்தினர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி  கூறியதாவது:விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம்,  மூலக்கடை, சிங்கையன்புதுார், சொக்கனுார், சட்டக் கல்புதுார், அரசம்பாளையம்,  கொண்டம்பட்டி, கோடங்கிபாளையம், தாமரைக்குளம், பட்ட ணம்,  கோவில்பாளையம், தேவராயபுரம், நல்லிகவுண்டன்பாளையம் உள்ளிட்ட  பகுதிகளில், இந்து முன்னணி சார்பில், 34 சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்படுகிறது.விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மூன்று சிலைகள், பொதுமக்கள்  சார்பில் எட்டு சிலைகள் உள்பட மொத்தம், 45 விநாய கர் சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்படுகிறது.

இதில், 43 சிலைகள் செப். 4ம் தேதி அம்பராம்பாளையம் ஆற்றுக்கு ஊர்வலமாக  கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகிறது.தேவராயபுரம்,  நல்லிகவுண்டன்பாளையத்தில் வைக்கப்படும் இரண்டு சிலைகள், வரும் 5ம் தேதி  வடக்கிபாளையம் வழியாக அம்பராம் பாளையம் ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு  விசர்ஜனம் செய்யப்படுகிறது.போலீஸ் ஆலோ சனை கூட்டத்தில், எடுக்கப்பட்ட  முடிவுகளின் படி, நிர்ணயிக்கப் பட்ட நேரத்தில் ஊர்வ லம்  துவங்கி,அறிவிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்ல வேண்டும். இவ்வாறு,  தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !