மதுரையில் விநாயகர் விழா பாதுகாப்பு ஆலோசனை
மதுரை : மதுரையில் செப்.,2ல் நடக்கும் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து அனைத்து துறை அலுவலர் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராஜசேகர் தலைமையில் நடந்தது.
சிலைகள் கரைக்க இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி மதுரை நகர் - வைகை வடகரை கீழ் தோப்பு பகுதி, ஒத்தக்கடை குளம், வைகை தைக்கால் பாலம், திருப்பரங்குன்றம் செவந்தி குளம் கண்மாய், அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாய்.மேலுார் - மண்கட்டி தெப்பக் குளம், கொட்டாம்பட்டி திரவுபதி அம்மன் கோயில் தெப்பம். வாடிப்பட்டி - குமாரம் கண்மாய், மேலக்கால் வைகை, தாமோதரன்பட்டி தென்கரை, அய்யனார் கோயில் ஊருணி, பெரியாறு கால்வாய்.
உசிலம்பட்டி - நீர் அதிகம் உள்ள கிணறுகள். திருமங்கலம் - குண்டாறு, மறவன்குளம் கண் மாய், குராயூர் கண்மாய், ஆவல்சூரன்பட்டி கிணறு, சிவரக்கோட்டை கமண்டல நதி. பேரையூர் - மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், வண்டாரி ஊருணி, எழுமலை பெரிய கண்மாய், டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சி கண்மாய்.
தென்னங்கீற்று, சாமியானா பந்தல் அமைக்க கூடாது. பட்டாசு, கூம்பு வடிவ ஒலிபெருக்கி தடை செய்யப்பட்டுள்ளது. காகிதக்கூழ், மரக்கூழால் செய்யப்பட்டவையே அனுமதிக்கப் படும்.