உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

கிருஷ்ணராயபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில், கணபதி ஹோமம்,  சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டியில், திரவுபதி  அம்மன் கோவிலில், சமீபத்தில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  கோவில் சுவருக்கு வண்ணம் பூசியுள்ள நிலையில், நேற்று 26ம் தேதி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. காலை, கோவில் முன்பு யாக குண்டம் அமைத்து, கணபதி  ஹோமம் பூஜை செய்யப்பட்டது. பின்னர் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !