உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

ஈரோடு: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்த, வழுக்கு மரம் ஏறும்  போட்டியில், இளைஞர்கள் அசத்தினர்.

ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி  விழாவை முன் னிட்டு, நேற்று முன்தினம் 25ல்,  இரவு, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி  நடந்தது.

விளக்கெண்ணெய், உளுந்து உள்ளிட்ட வழுக்கும் தன்மையுள்ள  பொருட்கள் கொண்டு, பூசி தயார் செய்யப்பட்ட, 30 அடி உயர வழுக்கு மரம்,  கோவிலின் முன் நடப்பட்டது. மரத்தின் உச்சியில் கஸ்தூரி அரங்கநாதருக்கு  சாற்றப்பட்ட அங்கவஸ்திரம், கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு, கார பதார்த்தங்கள்  கட்டி விடப்பட்டன. ஈரோடு, பவானி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த  இளைஞர்கள், தனித்தனி குழுவாக பிரிந்து, வழுக்கு மரம் ஏறும் போட்டி யில்  கலந்து கொண்டனர்.

ஒரு மணி நேரமான நிலையில், பவானியை சேர்ந்த  வாலிபர் மதி, மர உச்சிக்கு சென்று, அங்க வஸ்திரத்தை எடுத்து  வெற்றியடைந்தார். அவருக்கு, கோவில் பட்டாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டி  வாழ்த்தி பாடினர். கோவில் நிர்வாகம் சார்பில், பரிசு  வழங்கப்பட்டது. நிகழ்ச் சியில், கோவில் செயல் அலுவலர் கங்காதரன், முன்னாள்  கவுன்சிலர் விஜய்பாஸ்கர், பக்தர்கள் மற்றும் மக்கள் திரளாக கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !