உத்திரமேரூர் கங்கையம்மனுக்கு பால்குட ஊர்வலம்
ADDED :2252 days ago
உத்திரமேரூர் : உத்திரமேரூர், ஆகாய கங்கையம்மன் கோவில் விழாவில், ஏராளமான பக்தர்கள் நேற்று 26ம் தேதி, பால்குடம் சுமந்தனர்.
உத்திரமேரூரில் உள்ள ஆகாய கங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும், ஆவணி மாதம் திருவிழா நடைபெறும்.இவ்விழா, 79ம் ஆண்டாக, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன், நேற்று முன்தினம் 25ம் தேதி துவங்கியது. அன்று இரவு, கும்ப ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று 26ம் தேதிகாலை, 10:00 மணிக்கு, அப்பகுதி சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள், தலையில் பால்குடம் சுமந்து, முக்கிய வீதிகள் வழியாக, கங்கையம்மன் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பால் அபிஷேகமும்; இரவு, உறியடி விழாவும் நடைபெற்றன. இன்று 27ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, அம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் விழா நடைபெற உள்ளது.