ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு திருமஞ்சனம்
ADDED :2252 days ago
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில் வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேச வப் பெருமாள் கோவில் உள்ளது.இங்கு, மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானு ஜருக்கு, திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் நடக்கும்.இந்நிலையில், நேற்று 26ம் தேதி, ஆவணி மாதா திருவாதிரையை முன்னிட்டு, மதியம், 12:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.