சென்னையில் பிரெஞ்சு மொழியில் தயாராகும் பதிணெண் கீழ்க்கணக்கு நூல்
சென்னை: பழந்தமிழ் நுால்களான, பதிணெண் கீழ்க்கணக்கு, பிரெஞ்சு மொழியில் மொழிபெயர் க்கப்பட்டு, அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், சங்கத் தமிழ் நுால்கள், பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது உள்ளி ட்ட, 18 நுால்களை உடைய, பதிணெண் கீழ்க்கணக்கு நுால்கள், பிரெஞ்சு மொழிக்கு மொழி பெயர்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியில், பிரான்ஸ் நாட்டின், பன்னாட்டு உயர் கல்வி நிறுவன பேராசிரியர், சச்சி தானந் தம் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:பதிணெண் கீழ்க்கணக்கு நுால் களில், திருக்குறள் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு விட்டதால், மற்ற, 17 நுால்களை, பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் பொறுப்பை ஏற்றேன். அவற்றில், சிறுபஞ்சமூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நுால்களைத் தவிர, மற்றவற்றை மொழிபெயர்த்து விட்டேன்.இந்த நான்கு நுால்களின் பணிகளும் முடிந்து, அடுத்த மாத இறுதிக்குள் வெளியிடப் படும்.இவ்வாறு, சச்சிதானந்தம் கூறினார்.