உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.எஸ்.மங்கலம் அருகே அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

ஆர்.எஸ்.மங்கலம் அருகே அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம் கொல்லாருடைய அய்யனார் கோவில் எருதுகட்டு விழாவை முன்னிட்டு அய்யனாருக்கு புரவி ( குதிரை) எடுப்பு விழா நடைபெற்றது.

முன்னதாக பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய மண் குதிரைகளை கோவிலில் வைத்து வழிபாடு செய்த பக்தர்கள் பின் முக்கிய வீதிகள் வழியாக குதிரைகளை ஊர்வலமாக கொண்டு சென்று ஊரின் மையத்தில் வைத்து வழிபாடு செய்தனர். அதன் பின் மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு பக்தர்கள் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர். விழா ஏற்பாடுகளை வெட்டுக்குளம் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !