உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோட்டில் சதுர்த்தி விழா எதிரொலி: விநாயகர் சிலை விற்பனைக்கு குவிப்பு

ஈரோட்டில் சதுர்த்தி விழா எதிரொலி: விநாயகர் சிலை விற்பனைக்கு குவிப்பு

ஈரோடு: சதுர்த்தி விழாவுக்காக, களிமண் விநாயகர் சிலைகள், ஈரோட்டில் சாலையோரங் களில், விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா, செப்.,2ல் கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி வீடு, கடைகள், நிறுவனங்களில், விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஈரோட்டில், ஓசூரில் தயார் செய்யப்பட்ட, களிமண் சிலைகள், பிரப் சாலையில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஒசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் செய்யப்பட்ட, பலவண்ண களிமண் சிலைகள், விற்பனைக்கு உள்ளது. குறைந்தபட்சம், 110 ரூபாய் முதல், அதிகபட்சம், 8,000 ரூபாய் வரை சிலை உள்ளது. அரை அடி உயரம் முதல், எட்டு அடி வரை, மயில் விநாயகர், பசு, பாகுபலி, யானை, காளை, கற்பகம், வலம்புரி விநாயகர் என, சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளை கவரும் வகையில், நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளன. விழாவுக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ளதால், இரண்டு நாட்களில் விற்னை சூடு பிடிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சம்பத் நகரில் 11 அடி வீர விநாயகர்: ஈரோடு, சம்பத் நகரில், இந்து முன்னணி சார்பில், செப்.,2ல், 11 அடி வீர விநாயகர் சிலை, கணபதி ஹோமத்துடன் அமைக்கப்படுகிறது. மாலை 5:00 மணி க்கு பக்தர்கள் பூஜை செய்ய அனுமதிக்கப்படுவர். செப்.,4ல் இந்து பண்பாட்டு தினமாக, காலை, 6:00 மணிக்கு கோமாதா பூஜை நடக்கிறது. செப்.,5ல் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது என, இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பூம்புகாரில் கண்காட்சி, விற்பனை: ஈரோடு, மேட்டூர் சாலையில் உள்ள, பூம்புகார் விற்பனை நிலையத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் கண்காட்சி, விற்பனை தொடங்கியுள்ளது. இங்கு, 60 ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் பஞ்சலோக சிலை கள் விற்பனைக்கு உள்ளன. பஞ்சலோகம், பித்தளை, பேப்பர் கூழ், மண், வெள்ளெருக்கு வேர், மார்பிள் பவுடர், மாவுக்கல், கருங்கல் போன்றவைகளில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை கள், வெண் மரம், நூக்க மரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிக விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !