முதுகுளத்துார் அருகே மழை வேண்டி கஞ்சி ஊற்றும் உற்ஸவம்
ADDED :2343 days ago
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பொசுக்குடிபட்டி கிராமத்தில் உள்ள பதினாறுபிள்ளை காளியம்மன், ஆஞ்சநேயர் கோயில் கஞ்சிஊற்று உற்ஸவத்தை முன்னிட்டு முதலாம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.
மழைவேண்டியும்,விவசாயம் செழிக்கவும் கிராமமக்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கஞ்சிசட்டியை எடுத்து கோயிலை அடைந்தனர். பின்பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.காளியம்மன்,ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் நடை பெற்றது.
கோயில் மலர்களால்அலங்கரிக்கப்பட்டது.பின்பு கஞ்சியை அனைவருக்கும் வழங்கினர். கஞ்சி ஊற்று உற்சவத்தில்முதுகுளத்துார் சுற்றியுள்ள ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.இரவு வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது.ஏற்பாடுகளைபொசுக்குடிபட்டி கிராம மக்கள் செய்தனர்.