உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழைய வாகனங்கள் திருமலைக்கு செல்ல தடை

பழைய வாகனங்கள் திருமலைக்கு செல்ல தடை

திருப்பதி: திருமலைக்கு, 2003ம் ஆண்டிற்கு முந்தைய வாகனங்கள் செல்ல, தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், பெரும்பாலும் சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்கள் வாயிலாக வருகின்றனர். இந்நிலையில், மலைபாதையில் செல்லும் பழைய வாகனங்களிலிருந்து, புகை அதிகமாக வெளியேறுவதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதாக தேவஸ்தானம் கருதியது. அதனால், நேற்று முன்தினம் ஆக., 27ல், 2003ம் ஆண்டிற்கு முந்தைய வாகனங்களை, திருமலைக்கு செல்ல தடை விதித்து, தேவஸ்தானம் திருப்பி அனுப்பியது.

தேவஸ்தானம் மேற்கொண்ட இந்த திடீர் நடவடிக்கையால், அவ்வாகனங்களில் வந்த பக்தர் கள் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் முறை யிட்டனர். அதை ஏற்று, அக்டோபர் முதல், 2003ம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திரு மலைக்கு செல்ல, தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து பக்தர்களுக்கு அறிவு றுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !