உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கநாத சுவாமி கோயிலில் தேர் வெள்ளோட்டம்

சொக்கநாத சுவாமி கோயிலில் தேர் வெள்ளோட்டம்

விருதுநகர்: விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது.
இந்துசமய அறநிலையதுறையின் கீழ் 800ஆண்டுகள் பழமை வாய்ந்த சொக்கநாத சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணித்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சட்ட தேரில் தேரோட்டம் நடந்து வந்தது. சட்டத்தேரும் பழதானதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அரசு நிதி, மாலைப்பேட்டை பஞ்சு வியாபாரிகள் சங்கம், பொதுமக்களின் நன்கொடை என ரூ. 50 லட்சம் பெறப்பட்டு புதிய தேர் செய்யும்  பணி துவங்கியது.

4 அடுக்குகள் கொண்ட புதிய தேர் செய்யப்பட்டு அதன் வெள்ளோட்டம் நேற்று 28ல் நடந்தது. தேரை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் வடம் பிடித்து துவங்கி வைத்தார். இதையொட்டி சொக்கநாதருக்கும், மீனாட்சிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டன. தேருக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 4 ரத வீதிகளில் வலம் வந்தது. திரளான பக்தர் கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். செப்., 1ல் ஆவணி திருவிழா துவங்க உள்ள நிலையில் செப். 10ல் தேரோட்டம் நடக்கிறது. இதன் முன்னோட்டமாக நேற்று 28ல் புதிய தேரின் வெள்ளோட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !