திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் வழிபாட்டில் பொதுமக்கள் அவதி!
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவிலில் வழிபாட்டிற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவதால் நிர்வாக குளறுபடிகளை போக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டுள்ள ராகுபகவானுக்கு ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. இதனால் இங்கு தமிழ்நாடு மற்றும் மற்றமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிறப்பு மிக்க இவ்வாலயம் கடந்த சில மாதங்களாக சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளதாக பெரும்பாலான பக்தர்கள் குமுறுகின்றனர். இதுபற்றி ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் சத்யமூர்த்தி கூறியதாவது: கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைக்கு பக்தர்கள் செல்லவே தயங்கும் அளவுக்கு மதில் சுவர் ஓரம் மிகுந்த துர்நாற்றமும், புல், பூண்டு செடிகள் மண்டியும் உள்ளது. இதனால் பெரும்பாலானோர் கோவிலின் நான்குபுறமும் சிறுநீர் கழிக்கின்றனர். இதனையும் யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் கோவிலின் பல இடங்களில் அசுத்தம் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. வாகனம் நிறுத்தும் இடத்திற்கு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அந்த இடமும் செப்பனிடப்படாமல் மேடும் பள்ளமுமாக உள்ளது. இதில் மனக்குமுறலுடன் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் ராகுபகவான் பாலாபிஷேக ரசீது வாங்குகின்றனர். அங்கு ரூ.100, 250, 500 என விற்பனை செய்கிறார்கள். ரூ.65க்கு உள்ள டிக்கெட்டை விற்பனை செய்வதில்லை. 65க்கான டிக்கெட் உள்ளது என்பதற்கான எந்த விளம்பர பலகையும் வைக்கப்படவில்லை. கடந்த காலத்திலிருந்து ரூ.65 என்பது தான் பாலாபிஷேக டிக்கெட்டாக வசூலிக்கப்பட்டது. அதன்பின் கட்டண வசூலை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கோவில் செயல்படுகிறது. ரூ.65க்கு என்ன பிரசாதம் வழங்கப்படுகிறதோ அதே பிரசாதம் தான் ரூ.500க்கும் இரண்டாக வழங்கப்படுகிறது.
உள்ளே செல்வதற்குள் போதும், போதும் என்றாகும்படி தள்ளிவிடுகிறார்கள். பெரும் அவதிக்குள்ளாகி கொஞ்சமும் மன அமைதியின்றி சாமி தரிசனம் செய்யவேண்டி உள்ளது. இதற்கெல்லாம் அறநிலையத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடு த்து பக்தர்களுக்கு போதுமான வசதி செய்து தரவேண்டும். இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார். சென்னை பக்தர் செந்தில் தெரிவிக்கையில், ""இங்கு திருக்கல்யாணம் வைபவம் செய்வதற்கு ரூபாய் ஆயிரம் கட்டணம் வசூலித்தனர். ஆனால், அந்த வைபவத்திற்கு அனைத்து பொ ருட்களும் நாங்களே வாங்கி தரவேண்டியதாயிற்று. கோவிலிலிருந்து அனைத்தும் செய்யப்படும் என்று சொன்னார்களே தவிர எதுவும் தரவில்லை. இது எங்கள் மனதை பாதிப்படைய செய்கிறது. கோவிலுக்கு பக்தர்கள் மனம் அமைதிபெறவே வருகிறார்கள். ஒரு சிலரின் தவறான நிர்வாகத்தால் பக்தர்கள் மனம் வேதனைப்படும்படி நடக்கிறது, என்று புலம்பினார். கோவிலில் உள்ள சிவாச்சாரியார்களை மற்றொரு கோவிலான கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் கோவிலுக்கு முறை வைத்து கட்டாயப்படுத்தி அனுப்புகிறார்கள். பிரசித்திபெற்ற ராகுகோவில் சிவாச்சாரியார்கள் வேறு கோவிலுக்கு மாற்றப்படுவதால் சிவாச்சாரியார்களும் புலம்புகின்றனர். சுவாமிக்கு செய்கின்ற அபிஷேக பொருட்களும் குறைவாகவே உள்ளதாக பக்தர்கள் புலம்புகின்றனர். மேலும் உதவி கமிஷனர் தகுதிபெற்ற இந்த கோவிலுக்கு நிரந்தர உதவி கமிஷனர் எப்போதும் பணியில் இருக்க÷ வண்டும். ஆனால், கும்பகோண ம் உதவி கமிஷனராக உள்ளவர் இந்த கோவிலையும் பார்ப்பதால் சரிவர கவனிக்க இயலவில்லை என பக்தர்கள் கூறுகின்றனர். "இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலும், பக்தர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும் வகையிலும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.