பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு பால் அபிஷேகம்!
புதுச்சேரி : ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் இன்று 31ம் தேதி காலை நடக்கிறது. புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் ஸ்ரீராமநவமி உற்சவம் கடந்த 27ம் தேதி முதல் நடந்து வருகிறது. உற்சவ தினங்களில் காலை, மாலை இருவேளையும் லட்சார்ச்சனை நடக்கிறது. இன்று 31ம் தேதி, சனிக்கிழமை, ஸ்ரீராமநவமி புனர்பூச நட்சத்திரத்தில், ஸ்ரீராமபிரான் மூலவருக்கும் உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடக்கிறது. வழக்கமாக, ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஞ்ஜநேயருக்கு நடைபெற வேண்டிய ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம், இன்று 31ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர். "அறுசுவை அரசு நடராஜனின் அன்னதானம் பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் இன்று காலை நடக்கிறது. இதனை தொடர்ந்து, "அறுசுவை அரசு நடராஜனின், பிரமாண்டமான அன்னதானம் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.