கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :2249 days ago
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நேற்று 28 ல், பிரதோஷ வழிபாட்டில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். அதன்பின், சிவலோகநாதர் உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.