பொள்ளாச்சி சாய் கணபதி கோவிலில் செப். 2ல் கும்பாபிஷேகம்
பொள்ளாச்சி: பனிக்கம்பட்டி சாய்பாபா காலனியில், சாய்கணபதி கோவிலில், ராமர், மகா லட்சுமி, சரஸ்வதி, முருகன், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா செப்., 2ம் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி, 1ம் தேதி மாலை, 6:00 மணிக்கு மங்கள இசை, மகா கணபதி பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, ரக் ஷா பந்தனம், யாகசாலை பிரவேஷம் உள்ளிட்ட சிறப்பு பூஜை கள் நடக்கிறது.
இரவு, 7:30 மணிக்கு கும்பஸ்தாபனம், மூல மந்திர ேஹாமங்கள், கணபதி ஹோமம், சயாணா திவாசம், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.செப்., 2ம் தேதி காலை, 7:00 மணிக்கு மங்கள இசை, திருப்பள்ளியெழுச்சி, வேதிகார் ச்சனை, காயத்ரி ஜெப ஹோமங்கள், வேதபாராயணம், மகா பூர்ணாகுதியும்; காலை, 9:15 மணி க்குகலசங்கள் புறப்பாடு, விமானங்கள், மூலவர் மகா கும்பாபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, தச தரிசனம், கோ பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது.