உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி அருகே, அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா

பொள்ளாச்சி அருகே, அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் மனைவி நல வேட்பு விழா நாளை (30ம் தேதி) நடக்கிறது.

விழாவையொட்டி காலை, 9:45 மணிக்கு உலக சமுதாய சேவா சங்க கொடியேற்றுதல், காலை, 10:00 மணிக்கு இறைவணக்கம், குருவணக்கம் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

அறிவுத்திருக்கோவில் தலைவர் பாலசுப்ரமணியம், உலக சமுதாய சேவா சங்க தலைவர் மயிலானந்தன், ஆழியாறு அறிவுத்திருக்கோவில் இணை நிர்வாக அறங்காவலர் சின்னசாமி உள்ளிட்டோர் பேசுகின்றனர். ஆழியாறு அறிவுத்திருக்கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ’மனைவி நல வேட்பு விழாவில், மலர், கனி பரிமாற்றம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !