உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெகமத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு 40 இடங்களில் பிரதிஷ்டை

நெகமத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு 40 இடங்களில் பிரதிஷ்டை

நெகமம் : நெகமம் வட்டார இந்து முன்னணி சார்பில், செப்., 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.

சுற்றுப்பகுதியில் உள்ள ஆவலப்பம்பட்டி, சாலைப்புதுார், ஏரிப்பட்டி, நெகமம், சின்னநெகமம், செட்டிபுதுார், சிறுகளந்தை உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில், 40 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.சதுர்த்தியை முன்னிட்டு, கிராமங்களில் பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டி, இளைஞர் களுக்கான உறியடி போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்படுகின்றன.

மக்கள் வழிபாட்டுக்கு பின், செப்., 5ம் தேதி, நெகமம் நாகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனை தொடர்ந்து, விநாயகர் சிலைகள் அம்பராம்பாளையம் கொண்டு செல்லப் பட்டு, ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.நெகமம் சுற்றுப்பகுதி கிராமங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக, திருப்பூர் அடுத்துள்ள கொடுவாய் பகுதியில் இருந்து, இன்று, 40 விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !