பஞ்சலிங்க சுவாமிகளுக்கு பிரதோஷ பூஜை
ADDED :2252 days ago
உடுமலை: பிரதோஷத்தை முன்னிட்டு, திருமூர்த்திமலை பஞ்சலிங்க சுவாமிகளுக்கு, சிறப்பு பூஜை நடந்தது.
உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலையில், மலைமேல், 960 மீட்டர் உயரத்தில், பஞ்சலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிகளுக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர் என பல்வேறு திரவியங்களில், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன.மலைமேல், அருவிக்கு அருகில் அமைந்துள்ள கோவிலில், பிரதோஷத்தன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி என்பதால், சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.