உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி அருகே முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

ஊட்டி அருகே முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை

ஊட்டி:ஊட்டி அருகே அப்புகோடு பகுதியில் உள்ள ஆனந்தமலை முருகன்  கோவிலில் மாதாந்திர கிருத்திகை பூஜையொட்டி, காலை, 6:00 மணிக்கு கணபதி  பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு விநாயகருக்கு அலங்கார  பூஜை, நவகிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது, ஆன்மிக சொற்பொழிவு,  இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமசந்திரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !