உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல்லில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா

நாமக்கல்லில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா

நாமக்கல்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில்,  நாமக்கல்லில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா இன்று 30ல் கொண்டாடப்பட உள்ளது.  

கிருஷ்ணர் அவதரித்த திருநாளை, கிருஷ்ணர் ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி,  கோகு லாஷ்டமி என்ற பல்வேறு பெயர்களில் கொண்டாடி வருகின்றனர்.  இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்பட்ட இத்திருவிழா, தற்போது உலகெங்கிலும்  கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது.

இதற்கு முக்கியமான காரணம், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கான்) ஸ்தா பக ஆச்சாரியரான ஸ்ரீ ல பிரபுபாதரே ஆவார். ஜென்மாஷ்டமி விழா, இன்று 30ல் நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள சுப்புலட்சுமி மஹாலில் நடைபெற உள்ளது.  

மாலை, 6:00 மணிக்கு தொடங்கும் விழாவில், பஜனை, உபன்யாசம், கேள்வி பதில்  இரவு, 8:30 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் மஹா ஆரத்தி நடைபெற  உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !