கெங்கவல்லி, பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :2263 days ago
கெங்கவல்லி: கெங்கவல்லி, பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில், ஆறுபடை முருக பக்தர்கள், மக்கள் நன்கொடையில், கடந்த ஜூலை, 11ல், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தினமும் பூஜை நடந்தது. நேற்று 29ல், 48ம் நாள் நிறைவு மண்டல பூஜை வழிபாட்டு விழா நடந்தது.
குருமஹா சன்னிதானம் துறையூர் ஆதீனம் ரத்னவேலாயுதசாமி தலைமையில், குருமஹா சன்னிதானம் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம், கவுமார மடாலயம் ஆதீனம், காரமடை ஆதீனம் ஆகியோர், வேள்வி பூஜை செய்தனர். இதில், ஆறுபடை முருக பக்தர்கள் பேரவை, திருப்பணிக்குழு நிர்வாகிகள், வீர சைவ ஜங்கமர் உறுப்பினர்கள், வழிபாடு செய்தனர்.