உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

நடுவீரப்பட்டு விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

நடுவீரப்பட்டு: பண்ருட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவது குறித்து  ஆலோசனை கூட்டம் நடந்தது.பண்ருட்டி டி.எஸ்.பி.,நாகராஜன் தலைமை  தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ரேவதி, மலர்விழி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் நடக்காதவாறு விழாக்குழுவினர்கள் கவனமாக செயல்பட வேண்டும். ஊர்வலம் அனுமதிக்கப்பட்ட வீதிகளின் வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என போலீசார் வலியுறுத்தினர்.

சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், சந்துரு, செல்வம், ஜவ்வாது உசேன், அருண்குமார் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் கலந்து கொண்டனர்.காட்டுமன்னார்கோயில் காட்டுமன்னார்கோயில் காவல் நிலைய சரகம் மற்றும் புத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் அமைப்பது குறித்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.இன்ஸ்பெக்டர் ராஜா தலைமை தாங்கினார்.  

சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ஜவகர்லால் பேசுகையில் ’ரசாயன கலப்பில்லாத,  தீங்கு விளைவிக்காத வகையில், விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு இருக்க  வேண்டும். சிலைகள் அமைக்கும் இடத்தில், எளிதில் தீப்பற்றக்கூடிய  பொருட்களால் பந்தல் போன்றவை இருத்தல் கூடாது. 10 அடி உயரத்திற்கு  மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்க கூடாது.

மருத்துவமனை, பள்ளி வளாகம்  மற்றும் மத வழிபாட்டு கூடம் போன்ற இடங்களில் சிலை கள் அமைக்கக்கூடாது’  என்றார்.கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் சேகர், இளையராஜா, அபு இபுராகீம்,  சிவக்குமார், தமிழ்ச்செல்வன் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள்  பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !