உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலகிரியில் சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள்: கலெக்டர் அறிவுரை

நீலகிரியில் சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள்: கலெக்டர் அறிவுரை

ஊட்டி:’நீலகிரியில் சுற்றுசூழல் பாதிக்காத வகையில், ’கரிம’ மூலப்பொருட்களால்  செய்ய ப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்,’ என,  மாவட்ட நிர்வாக தெரி வித்துள்ளது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்  போது, வழிபாட்டிற்கு பின் நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது.  சிலைகளில் உள்ள வேதிபொருட்கள் நீரில் கரைந்து நீர் நிலைகள்  மாசடையவதால், அந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள், கால்நடைகள்  பாதிக்கின்றனர்.

நீர் நிலைகளை மாசுப்படுத்தும் வேதிப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.அதாவது,  சுற்று சூழலை பாதிக்காத ’கரிம’ மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர்  சிலைகளை மட்டும் வழிப்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.இம்மாவட்டத்தில்,  குன்னுார், லாஸ் நீர்வீழ்ச்சி, ஊட்டி காமராஜர் சாகர் அணை, கூடலுார் இரும்பு  பாலம் ஆறு, பந்தலுாரில் பொன்னானி ஆறு, கோத்தகிரியில் உயிலட்டி நீர்  வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை  வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டஇடங்களில் மட்டுமே போலீசாரின் உரிய  அனுமதி பெற்று விழிப்பட அனுமதிக்கப்டுவர். இவ்வாறு, அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !