கரூர் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு: கலெக்டர் தலைமையில் ஆலோசனை
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது.
அதில் அவர் பேசியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பில், நமக்கு மிகப்பெரிய கடமை இருக் கிறது. நீர்நிலைகள் நம் குடிநீர் ஆதாரமாக உள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத தும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு போன்ற இயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே, நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். நீரில்கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வண்ணங்களையுடைய சிலைகளை உபயோகிக்க வேண்டும்.
போலீஸ் அறிவுறுத்திய வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும். மேலும், சிலைகளை கரைப்பதற்காக அறிவுறுத்தப்பட்டுள்ள காவிரியாற் றின் கரையிலுள்ள தவுட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், மாயனூர், குளித்தலை, அமராவதி ஆற்றில் ராஜபுரம் பகுதியில் மட்டுமே கரைக்க வேண்டும்.
மேலும், குடிநீர் ஆதாரங்களை பாதிக்காத வகையில் குடிநீர் எடுக்கும் இடத்திலிருந்து, 500 மீட்டர் தொலைவில் சிலைகளை கரைக்க வேண்டும். ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட பிற நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்ட த்தில், எஸ்.பி., பாண்டியராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, டி.எஸ்.பி., கும்மராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.