நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே தியான உற்சவம் ஏ.வி.பி.,யில் நிறைவு
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மூன்று நாள் தியான உற்சவம், நடந்தது.
ராமச்சந்திர மிஷனின் ’ஹார்ட்புல்னஸ்’ என்ற அமைப்பு சார்பில், மூன்று நாள் தியான உற்ச வம் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங் களின் உதவி செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தாஜி தலைமை வகித்தார்.
யோகா பயிற்சியாளர் ஈஸ்வரி வரவேற்றார். பள்ளி தாளாளர் சண்முகம் சிறப்பு விருந்தினர் களை, அறிமுகம் செய்து வைத்தார்.நிகழ்ச்சியில், ’விதியை வடிவமைத்தல்’ என்ற புத்தக த்தை, சுவாமி நிர்மலேஷானந்தாஜி வெளியிட, சண்முகம் பெற்றுக் கொண்டார். இரண்டாம் நாள் நடந்த நிகழ்ச்சியில், தம்பு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கணேசன், ’சங்கத் தமிழும், ஆன்மிகமும் என்ற தலைப்பில் பேசினார். மூன்றாம் நாள் விழாவில், ’மனதில் என்றும் அமைதியும் சந்தோஷமும்’ என்ற தலைப்பில் பிரகாஷ் பேசினார். நிகழ்ச்சியில், ஆடிட்டர் சுதர்சனம், கோவை மாநகர ஹார்ட்புல்னஸ் அமைப்பின் கிளை பொறுப்பாளர் எழிலரசி, கோவை மண்டல பொறுப்பாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டனர். முகாமில், யோகாசனம், தியானம், பிராணயாமப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முதல்வர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.