உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு

நடுவீரப்பட்டு : பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று  29ல், உண்டியல் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.பண்ருட்டி திருவதிகையில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் திறப்பு கோவில் அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையில் நேற்று 29ல்நடந்தது.

செயல் அலுவலர் சீனுவாசன் மற்றும் சபாபதி, கோவில் சிப்பந்திகள்  மற்றும் சுய உதவிக்குழு வினர்கள் கலந்து கொண்டு, பக்தர்கள் காணிக்கையை  எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 2 லட்ச த்து 55 ஆயிரத்து 678 ரூபாய்  காணிக்கையாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !