உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பக்தர் நீராடும் சண்முகநதியில்படித்துறை அமைக்க வலியுறுத்தல்

பழநி பக்தர் நீராடும் சண்முகநதியில்படித்துறை அமைக்க வலியுறுத்தல்

பழநி : ’பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும், சண்முகநதியில் நிரந்தர மாக தண்ணீரைதேக்கி, படித்துறை அமைக்க வேண்டும்’ என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பழநியில், பத்தாயிரம் எக்டேர் பரப்பளவு பாசனமும், 20 க்கும் மேற்பட்ட கிராமப்புற குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதராமாகவும் உள்ளது சண்முகநதி. இந்நதியில் ஏராளமான அமலச் செடிகள், பாசிகள் ஆக்கிரமித்துள்ளன. குளிக்கும் பக்தர்கள் விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் பை, டப்பா, துணிமணிகள் போன்ற குப்பையையும் சேர்ந்து விடுகிறது.இவற்றால் ஆற்றுத் தண்ணீர் மாசுபடிந்து அசுத்தமாக உள்ளது. மறைமுகமாக மணல் திருட்டும் நடக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆன்மிகப் பெரியோர்கள் மூலம் சண்முகநதியின் ஒரு பகுதியில் துாய்மைப்படுத்தி, சிலமாதங்களாக கார்த்திகை நாளில் ஆரத்தி வழிபாடு நடக்கிறது.

படித்துறை, நிரந்தர தண்ணீர் அவசியம்சபரிமலை சீசன், தைப்பூச விழா நேரத்தில் குவியும் பக்தர்கள் வசதிக்காக சண்முகநதியை பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமித்துள்ள பாசிகள், அமலச்செடிகள், குப்பையை அகற்ற வேண்டும். ஆரத்தி வழிபாடு நடைபெறும் இடத்தில் கருங்கற்களால் படிக்கட்டுகள் அமைப்பதுடன், நதியை துார்வாரி நிரந்தரமாக தண்ணீர் தேக்க வேண்டும். இப்பணியை மழைக்காலத்திற்கு முன்னதாக துவங்கினால், சபரிமலை, தைப்பூச சீசன் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

அதற்கு மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், சுற்றுலா,பொதுப்பணித்துறை என அரசு துறைகள் இணைந்து செயல்பபட வேண்டும். இதுகுறித்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வையாபுரிகுளம் வாய்க்கால், துார்வாரி படகுசவாரி, வேலி, நடைபாதை அமைக்கவும், கழிவுநீர் சுத்திரிகரிப்பு வைக்கவும் முதல்வரின் 110விதியின்கீழ் ரூ. 51 கோடி திட்டம் அறிவித்துள்ளார். அதில் சண்முகநதியில் படித்துறை அமைக்கும் திட்டமும் உள்ளது” என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !