விதை விநாயகர் சிலை தமிழகத்தில் அறிமுகம்
சென்னை, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புதுமை முயற்சியாக, விதை விநாயகர் சிலை விற்பனையை, தமிழக தோட்டக்கலைதுறையினர் துவக்கியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா, செப். 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட, சிறு விநாயகர் சிலைகளை வைத்து, மக்கள் வழிபடுவர். கோவில்கள் மற்றும் பொது இடங்களில், பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து, மக்கள் வழிபடுவது வழக்கம். வழிபாடு முடிந்ததும், இந்த சிலைகள், நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு, தோட்டக்கலைத் துறையினர் புதிய முயற்சியாக, விதை விநாயகர் சிலை விற்பனையை துவக்கி உள்ளனர். வெண்டை மற்றும் கொத்தவரை உள்ளி ட்ட விதைகளை வைத்து, களிமண்ணால், விதை விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.சிறு தொட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவற்றை வாங்கி சென்று, பூஜை செய்த பின், தொட்டியில் நீரை ஊற்றி, சிலையை கரைத்து விடலாம். சிலையில் வைக்கப்பட்டுள்ள வெண்டை மற்றும் கொத்தவரை போன்ற காய்கறி செடிகள் வளர்ந்து, வீட்டிற்கு பயன் தரும்.
புதிய முயற்சியாக தோட்டக்கலைத் துறையினர், விதை விநாயகர் சிலைகளின் விற்பனை யை துவக்கியுள்ளனர்.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாததோடு, வீட்டிற்கு காய்கறி தரும் வகை யிலானது என்பதால், விதைவிநாயகர் சிலைக்கு, மக்களிடம் வரவேற்பு கிடைத் துள்ளது.