உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி விழா கண்ணன் உறியடி உற்சவம்

கிருஷ்ண ஜெயந்தி விழா கண்ணன் உறியடி உற்சவம்

உடுமலை:உடுமலை, பெரியகடை வீதி நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஜெயந்தி உற்சவ விழாவில் ஏழாவது நாளான நேற்று 30ல், கண்ணன் உறியடி உற்சவம் நடந்தது.நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஆவணி மாதம், கிருஷ்ணரின் அவதாரங்களை, ஒவ்வொரு நாளும் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்து, ஜெயந்தி விழாவை கொண்டாடுகின்றனர்.

ஜெயந்தி உற்சவம் கடந்த 24ம் தேதி துவங்கியது. விழாவில், தினமும் மாலை 4:00 மணிக்கு கண்ணன் பிறந்தான் சந்தான கோபால கிருஷ்ணன் சேவையும், தவழும் கண்ணன், வெண்ணை தாழி கண்ணன், ஸ்ரீ வித்யா ராஜகோபாலன், கோவர்த்தனகிரி கண்ணன், புன்னை மரக்கண்ணன் அலங்காரங்களில் சுவாமி காட்சியளித்தார். ஏழாவது நாளான நேற்று 30ல், மாலை, 6:00 மணிக்கு கண்ணன் உறியடி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !