உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் வெங்கடரமணர் கோவிலில் திருப்பவித்ரோத்ஸவம்

கரூர் வெங்கடரமணர் கோவிலில் திருப்பவித்ரோத்ஸவம்

கரூர்: தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், திருப்பவித்ரோத்ஸவ விழா வரும் செப்டம்பர் மாதம், 11ல் நடக்கிறது. பிரசித்தி பெற்ற வெங்கடரமண கோவிலில், செப்., 9 மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தியுடன், திருப்பவித்ரோத்ஸவ விழா துவங்குகிறது.

மறுநாள் மாலை, 6:30 மணிக்கு மஹா சாந்தி ஹோமம் நடக்கிறது. அடுத்த நாள் காலை, 10:30 மணிக்கு, திருப்பவித்ரோத்ஸவம் மற்றும் மஹா திருப்பாவாடை நைவேத்யம் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !